நேத்து ராத்திரி 11 மணிக்கு காலிங்பெல். நேத்துனு பார்த்து அத்தி பூத்தாபோல எனக்கு ஆபிஸ்ல கொஞ்சம் வேலை....அது சம்பந்தமாதான் எவனோ ஏதோ கேட்க வந்துட்டான் போலருக்குனு, நானும் வடிவேலு மாதிரி அடடா கடைய பெருசாக்கினாலும் ஆக்கினோம்....பன்னென்டு மணிக்கு கூட பன்னு வேணும் வெண்ண வேணும்னு வந்துடராங்கனு சலிச்சிகிட்டே போய் பார்த்தேன். பாத்தா...நம்ம வரதராஜன் ஜி. நான் அமெரிக்காவையும் அரூபாவும் பாக்க போறேன்.... சீயா இன் டிசெம்பர்னு ஸ்டைலா சொன்னார். (நான் சொல்லல ராஜன்ஜி ஒரு உலகம் சுற்றும் வாலிபர்னு). சரி விஷயத்துக்கு வருவோம்.
அரூபாவா..யாரு அதுனு தலைய சொரிஞ்சிகிட்டே யோசிச்சேன். என்னடா இது எவ்ளோ யோசிச்சாலும், நாம கேள்வி படாத பேரா இருக்கே......இவரு வேற அமெரிக்கா போறேனு சொல்ராரு. அமெரிக்கால யாரு நமக்கு தெரியாத
அரூரூரூபாஹ்(என்னமோ அமெரிக்கால எனக்கு எல்லாரையும் தெரிஞ்ச மாதிரி).......ஒரு வேளை அரூபா - மிஷெல் ஒபாமாவோட ஒண்ணு விட்ட சித்தப்பா பொண்ணா இருக்குமோ. அதுலயும் ஒரு டவுட்டு. .. மிஷெலே அசிங்கமாதான் இருக்கும். அத்த போய் இவரு ஏன் இப்ப பாக்குராரு.......ஒரு வேள இவங்க ரெண்டு பேரும் சில்லுனு ஒரு காதல் படத்துல வர்ர மாதிரி காலேஜ்ல ஒண்ணா படிச்சிருப்பாங்களோ....ம்ம்ம்ம். .அட சே.......ஒரு செகண்ட்ல....சுதாரிச்சி....... கண்ணடிச்சிகிட்டே... யாரு பாஸ் அந்த அதிருப சுந்தரி.... அரூரூரூபாஹ்ஆஆஆ....னு கேட்டேன்....சிரிச்சி கண்ண சரோஜாதேவி மாதிரி சிமிட்டி சொல்லமாட்டேன் சீக்ரெட்னு போய்ட்டார். ....ஜனகராஜ் மாதிரி மண்ட வெடிச்சிடும் போலாயிடிச்சி.. ...
ராத்திரி முழுக்க கொரட்ட மட்டும் வருது தூக்கம் வரல....மல்லாக்க படுத்தா வீட்டு சீலிங்ல, அரூபாஹ், பாக்யராஜ் படத்துல வர டிஸ்கோ சாந்தி மாதிரி செட்டிங் போட்டு டான்ஸ்லாம் ஆடினாங்க...யாரு இந்த அரூபா....யாரு இந்த அரூபா. ..னு கேள்வி மேல கேள்வி.....சே...இப்படி சொல்லாம போய்ட்டாரே இந்த மனுஷன். தூங்கி எழுந்ததும் மொத வேலை இந்த அரூபாங்குற புரியாத புதிரை முடிச்சவிழ்குறதுதான். காலைல ஆறு மணிக்கு வெச்சிருந்த அலாரமை அஞ்சு மணிக்கு மாத்தி வெச்சேன். நீ சரியான முடிச்சவிக்கிடா மகேஷ்னு என்ன நானே பாராட்டிகிட்டு தூங்கிட்டேன்.
அஞ்சு மணிக்கு எழுந்து பல்ல தேச்சிட்டு கம்ப்யூட்டர்ல உக்காந்து மொதல்ல கூகிளை ஒபன் செஞ்சேன். இந்த கூகுள் இருக்கானே, எதையுமே சுயமா யோசிச்சி சொல்ல தெரியாதவன், எப்பவுமே அவென் சொன்னான் இவென் சொன்னானு அடுத்தவன் சொன்னத ஆட்டைய போட்டுருவான். (Google is the world biggest plagiarist னு ஒரு blog எழுதனும். சரி அத அப்புறம் பார்க்கலாம்.) அரூரூரூபாஹ்ஆஆஆ யாருனு கேட்டதுக்கு விக்கி அங்கிள் Aruba is an island in the south carribean sea னு குடுக்குறான் டீடெய்லு. போட்டோலாம் பாத்தா சூப்பரா இருக்கு. .. ராஜன்ஜி.... ஜேம்ஸ்பாண்டு வில்லன்கூட சண்டை போடுறேன் பேர்வழினு வெள்ளகார குட்டிங்கள இந்த மாதிரி இருக்குற தீவுக்குதான் கூட்டிகிட்டு போய் ஜல்சா பண்ணுவாரு. பார்த்து ஜாக்கிரதை என்ஜாய்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக